வறுமையைக் குறைத்துக் கொண்டு தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் (MSMEs) இலங்கை மக்கள் அனேகமானோர் ஈடுபடுகின்றனர். ஆதலால் நாட்டினுள் இதற்காக ஊக்கப்படுத்துகின்றதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான சூழலொன்றை உருவாக்குவது கட்டாயமான விடயமாக உள்ளது. இந்தச் சூழ்நிலைக்குள் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே அனேக உள்ளகச் செயற்பாடுகள் உள்நாட்டு மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதனால் இதன் ஊடாக உள்நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் இதன் மூலம் ஏற்படுகின்றது இந்த நிலைமையின் அடிப்படையின் மீது பிரதேச பொருளாதார அபிவிருத்தி (RED) பாரம்பரிய அபிவிருத்தி திறமுறைக்காக கவர்ச்சிமிக்க மாற்றீடாக இது காணப்படுவதுடன் மட்டுமன்றி பிரதேச பொருளாதார அபிவிருத்தியின் போதான நன்மைகள் உள்நாட்டு சூழலுக்கு அமைவாக திறமுறைகளை வகுக்கும் போது இது உறுதுணையாக இருக்கும்.

பிரதேச பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான தனியார் - அரச துறை கலந்துரையாடலை உருவாக்கும் பொருட்டு அந்தந்த மாவட்டத்திற்குள் தேசிய மற்றும் மாகாண அரசாங்க அதிகாரபீட பிரதிநிதிகளை இணைக்கின்ற மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியம் தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்துடன் அரசாங்க சேவைகள் உருவாக்குநர்களைக் கொண்டு நிறுவப்படும். குறிப்பாக மாவட்ட மாகாண மட்டத்திலான கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகைகள் சூழல் பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திக்குத் தேவையான கலந்துரையாடலே இந்த ஒன்றியமாகும்.

மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியம் ஒன்றை நிறுவுதல்

மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தை நிறுவுவதற்கு முன்னர் மாவட்டத்தில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திக்கு உரிய பங்குதாரர்களைக் கூட்டி இந்த ஒன்றியத்தை நடைமுறைப்படுத்தும் விதம் பற்றியும் இதன் பணிகள் அத்துடன் ஒன்றிய உறுப்பினர்களை தெரிவு செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்படல் வேண்டும். இந்தப் பணிக்காக மாவட்டத்தில் பல செயலமர்வுகளை ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதுடன் இதற்காக அரச மற்றும் தனியார் துறை அத்துடன் அரச சார்பற்ற அமைப்புகளைக் கொண்ட பங்குதார்களுக்கு அழைப்பு விடுத்தல் வேண்டும் ஆதலால் இதன் முதல் நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் துறையில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திக்கு உரிய சகல பங்குதார்களையும் இனங்காண்பதாகும். மாவட்ட சபை கைத்தொழில் அபிவிருத்தி சபை அல்லது மாவட்ட செயலாளர் அலுவலகம் போன்ற பொருத்தமான இடத்தில் ஆரம்பித்து தொழில் முயற்சி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு ஏனைய அமைப்புக்கள் மற்றும் தொழில் முயற்சிகளின் ஒருங்கிணைப்புத் தகவல்களைக் கோருவதன் மூலம் இதனை மிகச் சிறந்தவாறு நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த பங்குதாரர்கள் அவர்களது வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஆரம்பத் தகவல்களைத் சேகரிக்க வேண்டும் எனவும் இவைகள் பிற்காலப்பகுதியில் மிகவும் விரி வடைந்து செல்லுகின்ற செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து பங்குதாரர்களாகப் பேணுவதற்கு உதவியாக இருக்கும். சேவை நிலையத்தில்  மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் பணிகள் கலந்துரையாடலின் ஒரு விடயமாக இருத்தல் வேண்டும் எனவும் இதற்காக மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்துக்கான ஒழுங்கு விதிகளை வகுத்து மேம்படுத்திக் கொண்டு கொண்டு பங்குதாரர்களுக்குச் சமர்ப்பிக்கலாம். பிரதிநிதிகளை பெயரிடுமாறு பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தல் வேண்டும் என்பதுடன் இதன் பின்னர் செயலமர்வுகளின் போது இறுதி அங்கத்தவர்கள் தெரிவு செய்தல் வேண்டும்.

அங்கத்தவர்கள்

மாவட்ட தொழில் முயற்சி அங்கத்தவர்கள் உரிய ஒன்றியத்தின் வெற்றி தொடர்பிலான பிரதான அங்கமாக இருப்பர். ஒன்றியத்தின் கட்டமைப்பு உள்நாட்டு நிலைமையின் அடிப்படையில் தங்கி இருக்கும் என்றாலும் கூட குறிப்பிடத்தக்க பொது வழிகாட்டல்களும் உள்ளன. உரிய  துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எந்வொரு தரப்பினதும் மிகையான அதிகாரப் போக்கினை தடுக்கும் பொருட்டு அங்கத்தவர்களின் கட்டமைப்பு சீரானதாகவும் அரச தனியார் துறை அமைப்புகள் அத்துடன் அரச சார்பற்ற அமைப்பின் அங்கத்தவர்கள் சமமானவாறும் கலந்திருக்கும் நிலைமை காணப்படல் மிக முக்கியமாகும். இந்த சீரான தன்மையைப் பேணும் பொருட்டு ஏனைய தேர்வு முறைகளையும் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டி ஏற்படலாம் அங்கத்தவர்களுக்கு அவர்களது அந்ததந்த அமைப்பின் தீர்மானத்தை எடுக்கக் கூடிய அதிகாரங்கள் காணப்படின் ஒன்றியம் மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாகவும், வெற்றிகரமானதாகவும் அமையும் ஒன்றியத்தின் தலைவராக மாவட்ட செயலாளர் இணைந்து கொள்ளுவது ஒன்றியத்தின் வரப்பிரசாதமாகும். அத்துடன் இச்செயற்பாடு வெற்றியடைவதில் இவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். மாவட்ட செயலாளர் இடமாற்றம் பெறும் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு தடை ஏற்படாதவாறு மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் பணிகள் தொடர்பில் சிறிய அறிவுறுத்தலை வழங்குதல் வேண்டும். மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்திற்கு செயலகமொன்று தேவை என்பதுடன் உதாரணமாக இது மாவட்ட வர்த்தக சபையாகவும் இருக்கலாம்.

ஒன்றியத்தின் அங்கத்தவர்கள்  - பொது வழிகாட்டல்

 • மாவட்ட செயலாளர்
 • மாவட்ட/ மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை
 • மாவட்ட வர்த்தக சபை
 • நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி சங்கம்
 • திட்டமிடல் பணிப்பாளர்
 • மாகாண சிறிய கைத்தொழில் பணிப்பாளர்
 • அரச தொழில் முயற்சி அபிவிருத்தி சேவைகளை உருவாக்குபவர்கள்
 • (தொழில் முயற்சி அபிவிருத்தி சேவைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனத்தைக் கொண்ட ) அரச சார்பற்ற நிறுவனம்
 • வர்த்தக வங்கி
 • நுண் நிதி நிறுவனம்
 • மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
 • ஊடகப் பிரதிநிதி ஒருவர்/ பிரதேச ஊடகவியலாளர் ஒருவர்

மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அவர்களது ஒத்துழைப்புக்காக எந்தவொரு நிதிப் பங்களிப்புகளும் பெற்றுக் கொள்ளல் ஆகாது. ஒன்றியத்திற்குத் தேவை கட்டணத்துக்காக கலந்து கொள்ளுபவர்கள் அன்றி அவர்களது விருப்பத்தின் பேரில் கலந்துகொள்ளுபவர்களாக இருத்தல் வேண்டும். கலந்து கொள்ளும் அமைப்புகளுக்கு உரித்தான மாவட்டத்தின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தி சம்பந்தமாக தனியார் - அரச துறை கலந்துரையாடல்களில் பங்குதாரர்களாகும் சந்தர்ப்பங்கள் போன்ற ஏனைய ஊக்குவிப்பு மற்றும் நன்மைகள் ஒன்றியத்தின் ஊடாக வழங்கப்படும். இதன் மூலம் வலையமைப்பு, ஏனைய அமைப்புகளுடன் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளல். அத்துடன் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்காக பொருத்தமான சூழலை உருவாக்குவதற்காக இடமொன்றும் வழங்கப்படும். இது பங்குதாரர்களுக்கு அவரவர்களது அமைப்பு ரீதியான ஒழுங்கு விதி முறைகளை அடைந்து கொள்ளுவதற்கும், அவரவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கும் அத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

ஒன்றியத்தின் நோக்கமும் பணிகளும்

மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் விரிவான நோக்கமானது நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தியின் ஊடாக பிரதேச பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்குவதாகும். இதற்கமைவாக மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் பணிகளை இலகுபடுத்துநராக செயற்பட்டு இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளுவதற்கான கலந்துரையாடலின் போது இணைந்து ஒன்றியமாக செயற்படுவதாகும். திட்டவட்டமான, மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் பணிகள் பின்வருமாறு அமையும்:

மாவட்ட தொழில்முயற்சி ஒன்றியத்தின் பணிகள்

 • மாவட்டத்தில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் பொருட்டு அங்கத்தவர்களுக்கு இடையே தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துதல்.
 • நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திக்கு உரியவாறு சகல மாவட்டங்களினதும் பங்குதாரர்களுக்கு இடையே வலையமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
 • நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறையின் பிரச்சினைகளை இனங் கண்டு தீர்வினைக் காண்பதற்காக பங்களிப்பு நல்குதல்.
 • நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உரியதான பிரச்சினைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டு ஆலோசனைகள் மற்றும் செயலமர்வுகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.
 •  மாவட்டத்தின் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திக்கு உரிய பிரேரணைகளை முன்வைத்தல், ஊக்குவித்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைப்பு பணிகளைச் செய்தல். உதாரணமாக வியாபார சூழல், சந்தைப்படுத்தல், கண்காட்சி, வியாபார ஒருங்கிணைப்பு, நடமாடும் சேவை, செயலமர்வு, கருத்தரங்கு அத்துடன் மதிப்பீடு செய்தல்.
 • தேசிய மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்தல்.
 • மாகாண வளங்களை சிறந்தவாறு பயன்படுத்துவதற்கு ஊக்குவித்தல், உதாரணமாக இயற்கை வளங்கள், காணி மற்றும் உழைப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
 • வர்த்த்தக சபையின் ஊடாக முதலீடு மற்றும்  ஏற்றுமதி ஊக்குவிப்புக்காக வசதிகளை வழங்குதல்.
 • மாவட்டத்தின் தேவைப்பாடு அத்துடன் அரச மற்றும் ஆதரவாளர்களினால் அனுசரணை வழங்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பாளராகச் செயற்படல்.

ஒன்றியத்தை நெறிப்படுத்தல்

வெற்றியடைவதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித் துறையில் அரச – தனியார் துறைகளுக்கு இடையே கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியம் தொடர்ச்சியாக  மாதத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் கூடுதல் வேண்டும் ஒன்றியகத்தின் தலைமைத்துவத்தை மாவட்ட செயலாளர் ஏற்றுக் கொள்ளல் வேண்டும் அல்லது இணைத் தலைமைத்துவத்தை பிரதான செயலாளருடன் இணைந்து வகித்தல் வேண்டும் இது கட்டாயமாகும். இது ஒன்றியத்தின் நம்பகத்தன்னைக்கும் மற்றும் சட்டரீதியான தன்மைக்கும் இது முக்கியமான விடயமாகும். மாவட்டத்தில் அல்லது மாகாணத்தில் முடியுமான அளவு உச்ச மட்டத்திலான ஒத்துழைப்பு ஒன்றியத்தின் தீர்மானத்துக்கு கிடைக்கின்றமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. மாவட்ட செயலாளர்/ பிரதான செயலாளர் இல்லாத சந்தர்ப்பத்தில் அடுத்து வரும் உயர் பதவியை வகிக்கின்ற அரசாங்க உத்தியோகத்தர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கூட்டத்தை நெறிப்படுத்துதல் வேண்டும் மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தில் உள்ள சகல நடைமுறை வேலைத் திட்டங்களுடன் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு செயலகமொன்றை தாபித்தல் வேண்டும்  மிகப் பொருத்தமான ஒன்றிய செயலகம் எனப்படுவது மாவட்ட/ மாகாண வர்த்தக  சபையாகும். இருப்பினும் இதை மேற்கொள்ள முடியாதவிடத்து ஒன்றியத்துக்கு வேறு பொருத்தமான அமைப்பொன்றை நியமிக்கலாம். மிகச் சிறந்த தேர்வு முறையானது இந்த பணிகளை முன்னெடுத்து செல்லும் பொருட்டு  தேவையான சாத்திய வள மற்றும் மனித வளங்கள் இதில் காணப்படுகின்றதா என்பதாகும். கூட்டங்களை நடத்துவதற்கு முன்னர் செயலகத்தினால் தலைவரின் ஒப்பத்துடன் ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுத்தல் வேண்டும். கூட்டங்களின் பின்னர் சகல உரிய பங்குதாரர்களுக்கும் கூட்ட அறிக்கையை  அனுப்புதல் வேண்டும். இதன் மூலம் அவர்கள் தகவல்களை அறிந்து கொண்டு அவர்களது பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுவர் அத்துடன் கூட்டத்தில் எடுக்கின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் அல்லது அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறுபட்ட ஒன்றிய அங்கத்தவர்களை நியமிப்பது முக்கியமாகும். ஒன்றியத்துக்கு ஒத்துழைப்பு தேவைப்படுகின்றதும் திட்டவட்டமான பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்குகின்றதுமான துணைக் குழுக்கள் அல்லது பதவியணியை நிறுவும் மாற்று நடவடிக்கைகளையும் தெரிவு செய்து கொள்ளலாம்.

ஒன்றியச் செயலகத்தின் பணிகள்​

மேலே சொல்லப்பட்டவாறு, உதாரணமாக வர்த்தக சபை போன்ற ஒன்றியத்தில் செயலகமொன்றை நிறுவுதல் வேண்டும். ஒன்றிய செயலகத்தின் பிரதான பணி ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு, ஒன்றியக் கூட்டங்களை முகாமைத்துவம் செய்தல் அத்துடன் ஒன்றியத்தின் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதலாகும்.

செயலகத்தின் செயற்பாடுகள்

 • ஒன்றியத்தின் கூட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் வகுத்தல்.
 • மாவட்ட செயலாளரின் ஒப்பத்தின் ஊடாக ஒன்றியத்தின் அங்கத்தவர்களை அழைத்தல், நிகழ்ச்சி நிரல், முன்னைய கூட்ட அறிக்கை அத்துடன் ஏனைய தேவையான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் அனுப்புதல்.
 • கூட்டத்தின் போது குறிப்புகளை எடுத்தல் மற்றும் அதற்குரிய பங்குதாரர்களுக்கு விநியோகித்தல்.
 • கூட்ட நிகழ்ச்சி நிரலை போதுமான கால இடைவெளிக்கு முன்னர் தயாரித்தல்.
 • கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளுக்காக மாவட்ட செயலாளரை முன்னிலைப்படுத்தி ஒன்றியத்தின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடுதல்.
 • நிகழ்ச்சி நிரலில் விடயங்களை உள்ளடக்குவதற்கான பிரேரணைக்கு அங்கத்தவர்களுக்கு இடமளித்தல்.
 • இறுதிக் கூட்ட நிகழ்ச்சி நிரல் பற்றி போதுமான காலப்பகுதிக்கு முன்னர் மாவட்ட செயலாளருக்கு அறிவித்தல். கூட்டங்களுக்கு முன்னர் மற்றும் கூட்டம் நடைபெறும் போது மாவட்ட செயலாளருக்கு ஒத்துழைப்பு வழங்குதல். தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக கூட்டங்களுக்கு வெளியேயும் தொடர்ச்சியாகக் கூடுதல்.
 • ஒன்றியத்தில் எடுக்கின்ற தீர்மானங்கள் தொடர்பில் மீளாய்யுப் பணிகள் மற்றும் செயற்படுத்தும் போது பங்குதாரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.

வெற்றிகரமான கூட்டத்துக்குத் தேவையான காரணிகள்

கூட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கும், மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தை ஆக்கத்திறன் வாய்ந்ததாக்குவதற்கும் உரியதான பிரதான காரணிகள் பல உள்ளன:

வெற்றிகரமாக்குவதற்கு உரியதான காரணிகள்

ஒன்றியத்தின் வெற்றிக்காக செயலகம் (வர்த்தக சபை) அத்துடன் தலைவர் (மாவட்ட செயலாளர்) என்னும் இரண்டு பிரிவுகளும் மிக முக்கியமானவைகளாகும். செயலகத் தலைவருடன் ஆக்கத்திறன் வாய்ந்ததான தொடர்புகளைப் பேணுதல் வேண்டும்.

ஒன்றிய அங்கத்தவர்களுக்கு இடையே கூட்ட கால நேரத்தில் இணக்கப்பாட்டுக்கு வருதல் வேண்டும். தொடர்ச்சியாக கூடுகின்ற கூட்டங்களின் திகதி, நேரம் மற்றும்  இடம் இருப்பின் கூட்டத்துக்கான காலப்பகுதியை ஒதுக்கிக் கொள்ளுவதற்கு அங்கத்தவர்களுக்கு இலகுவாக இருக்கும். கூட்டம் “பொதுவான” அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக செயலகத்தினால் உறுதிப்படுத்தல் வேண்டும்.

அங்கத்தவர் ஒருவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சந்தர்ப்பத்தில், அவரின் அமைப்பினால் கூட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற பதிலாள் ஒருவரைக் குறிப்பிடல் வேண்டும். மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தின் செயற்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் போன்ற இரண்டு விடயங்களுக்கும் இது முக்கியமாகும். இதன்போது மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியம் மற்றும் கூட்ட விடயங்கள் தொடர்பில் அறிவிப்பது மட்டுமன்றி நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தி விடயங்களில் தமது அமைப்பில் ஏற்படுகின்ற முக்கிய விடயங்களை மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்துக்கு அறிவிப்பது என்ற இரண்டு தொடர்பாடல்களையும் மேற்கொள்ளுவதற்கு ஒன்றியத்தின் அங்கத்தவர்களினால் இடமளித்தல் வேண்டும்.

கூட்ட நிகழ்ச்சி நிரலின் முன்னேற்ற அறிக்கை மற்றும் அமைப்புக்கு இடையிலான செயற்பாடுகள் போன்ற இரண்டு பிரிவுகளின் கலப்பு காணப்படல் வேண்டும். கூட்டங்களில் அமைப்புகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் கலந்துரையாடல்களை உறுதிப்படுத்தும் பொருட்டு பின்வரும் விடயங்களில் செயலகம் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.

 • அவர்கள் முகங்கொடுக்கின்ற திட்டவட்டமான பிரச்சினைகளை சமர்ப்பிக்குமாறு வியாபாரச் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல். இவைகள் மாவட்ட தொழில் முயற்சி ஒன்றியத்தில் கலந்துரையாடித் தீர்த்தல்.
 • தீர்வு காணப்பட வேண்டிய திட்டவட்டமான பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரபீடத்துக்கு அறிவித்தல்.
 • நிகழ்ச்சி நிரலுக்கு உரியவாறு சகல விடயங்களையும் உள்ளடக்கியவாறு கலந்துரையாட வேண்டிய பிரச்சினைகளை தயாரித்தல்.
 • சமர்ப்பிக்கின்ற பிரச்சினைகள் பற்றி ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கோருதல்.
 • மாவட்டத்தில் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தி சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்றவை பற்றிய செயற்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கு அல்லது ஏனைய பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்தல்.
 • அந்தந்த கூட்டங்களின் போது ஒன்றிய அங்கத்தவர்களினால் இனங் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்ற பங்குதாரர்களை நியமித்தல் வேண்டும். கூட்டத்தின் மத்தியில் அல்லது கூட்டத்தின் போது ஒன்றியத்தின் ஊடாக செயலகத்தினால் இந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் வேண்டும்.
 • சில ஒன்றியக் கூட்டங்கள்  பிரதேசத்தின் கல்விச் சுற்றுலாக்களாக இருக்கலாம் - உதாரணமாக, கூட்டம் முக்கிய பிரதேச தொழில் முயற்சிக்குள் நடைபெற வேண்டும் எனவும் இதில் இதற்கான வசதிகளை ஏற்படுத்துவர்களால் பிரதேசம் பூராவும் உள்ளடங்கும் வண்ணம் சுற்றுலாப் பிரதேசங்கள் அமைய வேண்டும்.

தொழில் முயற்சி ஒன்றியத்திற்கான நிறுவன கட்டமைப்பு

 

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Makandura Opening Ceremony

Incubator & Technology Transfer Center (Business Research & Development Center),...

We are delighted to officially announce the launch on September...