பயிற்சி மற்றும் அபிவிருத்தி தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் (NEDA) பிரதான பாகங்களாகக் காணப்படுகின்றன. அமைப்பின் ஊழியர்களுக்கு அல்லது தொழில்முயற்சியாளர்களுக்கு திட்டவட்டமான தேர்ச்சி, ஆற்றல் மற்றும் அறிவை வளர்த்தல் முக்கியமாகும். குறிப்பாக தொழில்முயற்சியாளர்களுக்கு வியாபாரத்துறையில் பெறுமதி வாய்ந்ததும் போட்டிகரமானதுமான நிலைமையில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இந்தத் தேவைப்பாடுகளை பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தியின் ஊடாக எய்து கொள்ளலாம். தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் (MSMEs) மற்றும்  வியாபார அபிவிருத்தி  சேவைகள் (BDS) உருவாக்குநர்களின் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்களது பணிகளின் நோக்கத்தை எய்து கொள்ளும் பொருட்டு மனித வள அபிவிருத்தியின் சகல விடயங்கள் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்தி தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை பயிற்சித் தொகுப்புகள் திட்டமிட்டும் அதனை விருத்தி செய்தும் வருகின்றது.

பிரதான பயிற்சித் துறைகள்

 • தொழில்முயற்சி அபிவிருத்தி
 • தொழில்நுட்ப பயிற்சி
 • சந்தைப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
 • வியாபாரத்  திட்டமிடல்
 • சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை
 • வணிக முகாமைத்துவம்
 • மனித வள முகாமைத்துவம்
 • தொழிற்பாட்டு முகாமைத்துவம்
 • அமைப்பு நடத்தை
 • நிதி முகாமைத்துவம்
 • கணக்கியல் மற்றும் கணக்குப் பதிதல்
 • செயல் நுணுக்க முகாமைத்துவம் போன்றன.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

Makandura Opening Ceremony

Incubator & Technology Transfer Center (Business Research & Development Center),...

We are delighted to officially announce the launch on September...