Employment-Opportunities

employment-opportunities

Employment-Opportunities

உயர்தொழில் வாய்ப்பு

கைத்தொழில் அமைச்சு

தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை

(தே.தொ.மு.அ.அ - NEDA)

 

தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையிலுள்ள பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு தகைமைபெற்ற இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

i.       இவர் அதிகாரசபையின் எல்லாத் தொழிற்பாடு, நிருவாகம் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாவார்.

ii.      தே.தொ.மு.அ.அ இன் விழுமியம், தொலைநோக்கு, பணிக்கூற்று ஆகியவற்றை மதிப்பிடவும், குறுகியகால நீண்டகால இலக்கினை அடையவும், பணிப்பாளர் சபைக்கு உதவுதல்.

iii.     எல்லா சிறிய, நடுத்தர, தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுத்துச் செல்லப்படும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதலும் அவற்றைக் கண்காணித்தலும்.

iv.     சட்ட விடயங்களுடன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் ஒருங்கிணைத்தல் அத்துடன் தேவையேற்படுமிடத்து சட்ட நீதிமன்றம் மற்றும் தொழில் நியாயசபைகளில் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

v.      கொள்கைத் திட்டங்களை உருவாக்குவதனை இலகுவாக்குவதற்காக நிறுவனத்தின் போக்கு, விடயங்கள், பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கைகளை பணிப்பாளர் சபைக்கும் அதன் குழுவிற்கும் அறிவித்தல்.

vi.     காலத்திற்குக் காலம், தலைவர் அல்லது பணிப்பாளர் நாயகத்தினால் ஒப்படைக்கப்படும் மேலும் ஏதாவது வேலைகள்.

 

கல்வித்தகைமைகளும், அனுபவமும்:

 

வெளிவாரிப் பரீட்சார்த்திகள்: (கீழ்வரும் 01 மற்றும் 02)

 

1.      பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவம்ஃ விஞ்ஞானம் / விவசாயம் / வர்த்தகம் / வியாபார நிர்வாகம் / பொறியியல் ஆகிய களத்திலான ஒரு இளமானிப்பட்டம்.

அத்துடன்

         பொருத்தமான களத்திலுள்ள பட்டப்பின்படிப்பு / முதுமாணிப் பட்டதாரி அல்லது குறித்த பதவியின் விடயதானத்துடன் சம்பந்தப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட உயர்தொழில்சார் பட்டய நிறுவனத்தின் இணை அங்கத்துவம்.

மேலும்,

         ஒரு கூட்டுத்தாபனம் நியதிச்சபை அல்லது ஒரு பிரபல்யமான தனியார் நிறுவனத்தில் முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் கடமையாற்றிய அனுபவம்.

 

2.      பதவியுடன் சம்பந்தப்பட்ட களத்திலான ஒரு நன்கு அறியப்படும் உயர்தொழில்சார் பட்டய நிறுவனத்தில் முழுமையான அங்கத்துவம்.

மேலும்,

ஒரு கூட்டுத்தாபனம் நியதிச்சட்டசபை நிறுவனம் அல்லது ஒரு பிரபல்யமான தனியார் நிறுவனத்தில் முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் கடமையாற்றிய அனுபவம்.

 

1.      மேலே, வெளிவாரிப் பரீட்சார்த்திகளுக்கான வகையினத்தில் கொடுக்கப்பட்டுள்ள படியான கல்வித் தகைமைகளைப் பெற்றிருத்தல்.

அல்லது,

2.      குறித்த பதவிக்குரிய விடயப்பரப்பில் முகாமைத்துவ மட்டத்தில் (MM - தரம் 1) குறைந்தது ஐந்து (05) வருடங்கள் திருப்திகரமான சேவையினைப் பூர்த்தி செய்திருத்தல்.

 

வயது:

வயதானது, 35 வருடங்களுக்குக் குறையாமலும் 55 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். உள்வாரி மாணவர்களுக்கு மேல்மட்ட வயதெல்லை பொருந்தாது.

 

சம்பள அளவுத்திட்டம்:

HM 1 - 3 - 2016 - 86,865 - 15 X 2,270 - 120,915

 

ஏனைய வருமானங்கள்:

ரூ. 50,000/- அளவிலான வாகனப் படிகள் மற்றும் எரிபொருள் படிகள் ஆகியன.

 

சேவைகளுக்கான விதிகளும், நிபந்தனைகளும்:

இந்த வகையான எல்லா ஆட்சேர்ப்புகளிலும் பதவியுயர்வுகளும் கண்டிப்பாக தே.தொ.மு.அ.அ இன் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவானதாக இருக்கும்.

 

தெரிவுசெய்யும் முறை:

தெரிவுசெய்தலானது, தே.தொ.மு.அ.அ இனால் நியமிக்கப்படும் ஒரு குழுவினால் நடாத்தப்படும் ஒரு அடிப்படை நேர்முகப்பரீட்சையின் பின்னராகும்.

 

விண்ணப்பதாரியானவர், அவரின்; திறமையான கல்வித்தகைமை, அனுபவம் மற்றும் அவர் நேர்முகப்பரீட்சையில் வெளிப்படுத்திக்காட்டும் செயற்பாடு ஆகியனவற்றைப் பொறுத்துப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுவார்.

 

கல்வித்தகைமை மற்றும் தொழில் அனுபவச் சான்றிதழ்களின் பிரதிகளுடன்கூடிய பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, 29 அக்டோபர் 2021 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். இத்திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அரசாங்க நிறுவனங்கள் ஃ அரச நியதிச் சபைகளிலிருந்தான விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள், விண்ணப்பதாரியின் திணக்களத்தலைவரின் சிபாரிசுடன் கூடியதாக, குறித்த திணைக்களத் தலைவரினூடாக அனுப்பப்படல் வேண்டும். மேலும் கடிதவுறையின் இடதுபக்க மேல்மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்குறிப்பிடப்படல் வேண்டும்.

 

தலைவர் / பணிப்பாளர் நாயகம்,

தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை,

இல. 561/3, எல்விட்டிகல மாவத்தை,

கொழும்பு 05.